- Edition: 1
- Year: 2007
- Page: 368
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசல் படைப்பகம்
1857 எழுச்சியின் பேரோசை
“”ஒரு புயலின் நெருக்கத்தை நான் உணர்கிறேன். ஒரு சூறாவளியின் முனகலை நான் கேட்கிறேன். அது எங்கே, எப்பொழுது, எப்படித் தாக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.” -லெப்டினஸ்ட் கர்னல் மார்ட்டினோ மே 5, 1857 நாளிட்டுத் தன் சக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில்…
மே 11, 1857. ஒரே இரவில் நாறபது மைல்களைக் கடந்து இரத்தம் தோய்ந்த சீருடையுடன் சில நூறு சிப்பாய்கள் இதிகாசத் தலைநகரான டெல்லியைக் கைப்பற்றியதும், எண்ணி இருபதே நாட்களில் இந்துஸ்தான் படைத்தளங்களில் படீர்படீரென கலகங்கள் வெடித்ததும், அடுத்த ஓரிரு வாரங்களில் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சிக்கு உரமூட்டியதும் எவரும் எதிர்பாராத இந்திய வரலாற்றின் திருப்பங்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக வரலாற்றிலேயே ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியாவில் தோன்றிய மிகப் பிரமாண்டமான எழுச்சி அது. அதன் விரிவும் வீச்சும் அசத்தலானவை.
தந்திகள் பறந்தன. தபால் சாரட்டுகள் விரைந்தன. இருட்டு அப்பிய சந்து பொந்துகளில் ரகசியங்களை சலித்தெடுக்க ஒற்றர்கள் கண்கள் உருட்டித் திரிந்தனர். எல்லாம் மெல்லக் கசிய கசிய… உறைந்தது இங்குலாந்து!
Book Details | |
Book Title | 1857 எழுச்சியின் பேரோசை (1857 Ezhuchiyin Perosai) |
Author | முனைவர் கா.மோகன்ராம் (Munaivar Kaa.Mokanraam) |
Publisher | வாசல் (Vaasal) |
Pages | 368 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |